நோயாளர்களின் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்குள் அவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், MJF Charitable Foundation – East நிறுவனத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (14 ஆகஸ்ட் 2026:) 10 விசேட சக்கர நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
சுமார் ரூபா 4 இலட்சம் பெறுமதியான இந்த விசேட சக்கர நாற்காலிகள், நடமாட்டத்தில் சிரமம் உள்ள நோயாளர்களுக்கு வைத்தியசாலை வளாகத்திற்குள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வன்பளிப்பு, சமூக அமைப்புகளும் அரச சுகாதாரத் துறையும் இணைந்து நோயாளர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் R. முரளீஸ்வரன், அன்பளிப்பை வழங்கிய MJF Charitable Foundation – East நிறுவனத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்புகள் அரச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நோயாளர்களின் வசதி, கண்ணியம் மற்றும் பராமரிப்பின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும், வழங்கப்பட்ட 10 விசேட சக்கர நாற்காலிகளும் நோயாளர்களின் நலனுக்காக மிகுந்த பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சார்பில், MJF Charitable Foundation – East நிறுவனத்தின் இந்த பெறுமதியான சமூகப் பங்களிப்பிற்கும், கிழக்கு மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு வழங்கி வரும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
“சமூகத்தின் ஆதரவு – சிறந்த நோயாளர் பராமரிப்பிற்கான வலுவான துணை.”

-Edited.jpg)

-Edited.jpg)
-Edited.jpg)





