வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

 










வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை 2025இல் தோற்றி, அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 18 மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டார்கள். இதன்போது மாணவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்று வெற்றிப் பதக்கங்களும் பரிசில் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது 1998 (O/L), 2001 (A/L) பழைய மாணவர்களின் பூரண அனுசரணையுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.