சமுர்த்தி தேசிய வேலைத்திட்ட மாதத்தை முன்னிட்டு, மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் வடக்கு (150 B) பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ‘ரண்விமன’ ஆரோக்கிய வசதியுடைய புதிய வீடு நேற்று (27.07.2026) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய வீடு திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிக்கு ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகவும் உத்தியோகத்தர்களாகவும்:
திருமதி R. சங்கவி – மகாசங்க நிறைவேற்றுக்குழு தலைவி
திரு. க. உதயகுமார் – சமுர்த்தி தலைமையக முகாமையாளர்
திரு. சா. ஆனந்த மோகன் – கருத்திட்ட முகாமையாளர்
திரு. கா. நவறஞ்சன் – ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர்
திருமதி சோ. தமிழ்வாணி – தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர்
ஆகியோருடன் சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.jpeg)



.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)







