வரதன்
மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் 8 சபையின் 15 வது பொதுக்கூட்டமானது முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரினால் தலைமையுரையுடன் மாநகரசபையின் நிலையற்குழுக்களின் முன்மொழிவுகள் முன்மொழியப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் கதிர்காம பாதயாத்திரை அன்னதான குழு இணைந்து கதிர்காம காட்டுவழிப்பாதையில் முன்னெடுக்கும் அன்னதான நிகழ்வுகளுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவையான ஏற்பாடுகளுக்கு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இனங்காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்
நிதிகள் மூலம் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது



.jpeg)

.jpeg)


.jpeg)




