வரதன்
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மண்முணை தென்மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மகிழடித்தீவு கட்டுப்பத்தை வீதி காணப்படுகின்ற
சிறிய மதகு சுமார் 3.7 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி பணிகளை நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
மண்முணை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இ. திரேச குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன் பட்டிப் பளை பிரதேச செயலாளர் எஸ் சுதாகர் பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இந்த புதிய மதகு அமைக்கும் திட்டம் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)





