ஆள் மாறாட்டம் செய்த போலி வழக்கறிஞர் கைது .

 

 


 முறையான தகுதிகளோ அல்லது உரிமமோ இன்றி வழக்கறிஞராகச் செயல்பட்டு, நீதிமன்றங்களில் 26 வழக்குகளில் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் 'பிரையன் எண்டிவா' (Brian Mwenda) என்ற கென்ய நபர் குறித்த செய்தி உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையான வழக்கறிஞர் ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி கணக்கைத் திருடி ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில்முறை தர்மம் மற்றும் சட்டத் தகுதிகள் குறித்து உலகளவில் பல்வேறு கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன