வரதன்
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு, மண்முணைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட செல்வா நகரில் 3.3 மில்லியன் ரூபாய் செலவில் இடம்பெற்ற கிராமிய பாலம் அபிவிருத்தி நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மண்முணைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ரோஹினி விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர்களான இளைய தம்பி ஸ்ரீனாத், ஞான முத்து ஸ்ரீனேஸன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
கடந்த பல வருடங்களாக இப்பதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலங்களில் இப்பதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இந்த கிராமிய பாலம் அமைக்கும் திட்டம் திட்டத்தின் ஊடாக அது நிறைவேற்றப்பட்டுள்ளது
.jpeg)

.jpeg)



.jpeg)







