வரதன்
கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா எதிர்வரும் 15 ம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து உகந்தை மலை முருகன் கோவிலுக்கு கடந்த இரு தினங்களாக தினசரி காலையில் 15 க்கு மேற்பட்ட போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன
இருப்பினும் மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் இந்த மலசல கூடம் மற்றும் குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் அடியார்கள் ஊழியர்கள் பல சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பல தடவை தெரிவித்து இருந்தபோதிலும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை
இன்று தமது பயணங்களை மேற்கொண்டு மிகுந்த அசோகரியங்கள் உடன் சாரதிகள் நடத்துனர்கள் பொதுமக்கள் அடியார்கள் வயதானவர்கள் சிறியவர்கள் என பலரும் இந்த அத்தியாவசிய பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
எனவே உரிய தரப்பினர் உடனடியாக இந்த அத்தியாவசிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு சாரதிகள் அடியார்கள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்
.jpeg)

.jpeg)





