இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றின் கீழ், "ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன அவரது வீட்டில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நேரில் பார்வையிட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, பிரீத்தி ஜயவர்தன தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.





