மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம்: சுவாமி வெளிவீதி உலா வெகுவிமர்சை!













​கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமை கொண்ட தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, 17ஆம் நாள் திருவிழா (25ஆம் தேதி சனிக்கிழமை) மிகச் சிறப்பாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது.

​விழா நாளன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றதுடன், தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்புப் பூஜைகளும் நைவேத்தியங்களும் நிறைவேற்றப்பட்டன.
​அதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான், விநாயகப் பெருமான் மற்றும் தாய்-தந்தையரான பரமசிவன்-பார்வதி ஆகியோருடன் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

​'அரோகரா' கோஷங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்வில், பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.
எதிர் வருகின்ற 30 ம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.