மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முன்பள்ளிமாணவர்களுக்கான மாவட்ட மட்ட கலை நிகழ்வு .


 


























முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு  மற்றும் அபிவிருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட மட்ட கலை  நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 18.07.2026 அன்று பிரதேச செயலாளர் திரு்  MBM . முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் கலந்து கொன்டு சிறிப்பித்ததுடன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர்  திரு் S.ராஜ்பாவு , கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் திரு. A. தாஹீர் , பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , நிர்வாக உத்தியோகத்தர் , மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு வீ.முரளிதரன்  மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,முன்பள்ளி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொன்டதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் 
 
இவ் நிகழ்வானது கோறளைப்பற்று ,கோறளைப்பற்று மத்தி ,கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலகபிரிவுகளை உள்ளடக்கியதாக இந்நிகழ்வு ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.