கதிர்காம யாத்ரிகள் வெப்பமான காலநிலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நடந்து கொள்ளவும்--பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 

 


வரதன்

 

கதிர்காம புனித பாதை யாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் வெப்பமான காலநிலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நடந்து கொள்ள வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 தற்போது நாட்டில் நிலவு வரும் வெப்பமான காலநிலை அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு காட்டு வழி பாதயாத்திரை போது உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக சுகாதாரப் பிரச்சினை மற்றும் உடல்நல கேடு சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவே

 பாதயாத்திரை செல்லும் அடியார்கள் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உடல் நிலைகளை பாதுகாத்து புனித யாத்திரையை மேற்கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் 

உங்களது பாதுகாப்புக்காக கடமையில் உள்ள பாதுகாப்பு படையினரின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் நடந்து கொள்ள வேண்டும்

 உங்களது குடும்பங்களையும் எண்ணி  கவனத்தில் எடுத்து சுகாதார செயல்பாடுகளை கவனத்தில் எடுத்து இந்த புனித யாத்திரையை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்