வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமில்லாத நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.