நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் உலகளவில் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகும்

 


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் உலகளவில் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகும் என திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தின் புதிய பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், தயாரிப்பாளர் அளித்த சமீபத்திய பேட்டியில், படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தணிக்கைக் குழுவின் அனுமதி தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திரைப்படம் திட்டமிட்டபடி வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இதற்கிடையில், பல பகுதிகளில் திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை முன்பதிவு மூலம் மட்டும் ரூ.6.5 கோடிக்கும் அதிகமான வசூல் பதிவாகியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.