மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (31) இடம் பெற்றது. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இடம் பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக இதன் போது அபிவிருத்தி குழு தலைவர் மீளாய்வுகளை மேற்கொண்டார். இதன் போது மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்கு வர்த்தமானி செய்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான் பொண்டுகள் சேனை பால நிர்மாண வேலைகளின் முன்னேற்றம், மண்டுர் குருமன்வெளி, பட்டிருப்பு பால நிர்மான முன்னேற்றம், மேலும் மாவட்டத்திற்கு புதிதாக அமைக்க வேண்டிய அம்பிளாந்துறை குருக்கல்மடம், திகிலிவெட்டை - சந்திவெளி மற்றும் நரிப்புல் தோட்டம் பங்குடாவெளி பால நிர்மான பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது மனித காட்டு யானைகள் மோதல்கள், மட்டக்களப்பு வாவியினை தூர்வார்வதினுடாக வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தல் மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், சிறைச்சாலைக்கான புதிய இடத்திற்கான சாத்தியவளம், நெல் கொள்வனவு செய்தல், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள், யானை வேலி அமைத்தல், சிறு குளங்களை புணர் அமைத்தல், பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்தல், காணி பிரச்சினைகள், ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், கிறவல் அகழ்வு உட்பட்ட மேலும் பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு முப்படை மற்றும் பொலிசாரின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்வதற்கு உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் மேலும் முக்கியமாக காணப்படும் மக்கள் நலப்பணிகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


.jpeg)

.jpeg)



.jpeg)


.jpeg)




.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)




