'ஜனநாயகன்' திரைக்கு வரும் முன்பே முன்பதிவில் ரூ. 2.5 கோடி வசூல் பெற்று சாதனை .

 


2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக 'ஜனநாயகன்' உருவெடுத்துள்ளது.
 
நடிகர் விஜய்யின் கலைப்பயணத்தில் இதுவே கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக, ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் தள்ளிவைக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து, படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
பல்வேறு தடைகளையும், சவால்களையும் கடந்து, தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாடுகளில் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தற்போது வரை இந்த திரைப்படம் முன்பதிவில் மட்டும் ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
 
திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே இந்த திரைப்படம் முன்பதிவில் மாபெரும் வசூல் சாதனையைப் படைக்கும் என வணிக ஆய்வாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.
 
விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதித் திரைப்படம் என்பதால், இந்த திரைப்படம் திரைத்துரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.