“நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 










 

 

ந.குகதர்சன் 

நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக் கலாசாரம் தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலான சத்தியப்பிரமாணம் எடுத்தல் மற்றும் அது தொடர்பில் சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் நடைமுறைப்படுத்துவதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வு  கிழக்கு மாகாண  பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கு.குணநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றுகையில்

 இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியன தற்போதைய அரசின் முதன்மையான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நேர்மைக் கலாசாரம் தேசிய செயற்பாட்டை தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து அரச சேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்த ஒன்றாக இணையவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

தேசிய நேர்மை வாரம் இம் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
குறித்த நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் திணைக்களத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.