2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

 


 

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 இதற்கமைய, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் பின்தள்ளி இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கையின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம், வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை அனுபவிக்கக்கூடிய சுற்றுலா வாய்ப்புகள் என்பன இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இயற்கை சூழல், கலாசாரம், வனவிலங்கு அனுபவங்கள் மற்றும் இலகுவான போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை ஒரே சுற்றுப்பயணத்தில் அனுபவிக்கக்கூடிய சுற்றுலாத் தலங்கள் மீது சுற்றுலாப் பயணிகளின் கவனம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை உலகின் தீவு சுற்றுலாத்துறையின் புதியதொரு மைல்கல்லாக மாறிவருவதாகவும் அந்த மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.