நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05)
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 34
பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து, பெண் கைதிகள்
மற்றும் ஆண் கைதிகள் குழுவினர் சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டத்தை
ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.





