ISO தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது அரச வங்கியாக மக்கள் வங்கி மாறியுள்ளது.
மக்கள் வங்கி தனது வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவ முறைமைக்காக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற ISO 22301:2019 22301:2019 தர அங்கீகாரத்தைப் பெற்று, இலங்கையில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது அரச வங்கியாக மாறி முக்கியத்துவம்மிக்க சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது.
வணிகத் தொடர்ச்சி தொடர்பான வங்கியின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு ரீதியான மீள்திறன் ஆற்றல்கள் ஆகியன தொடர்பான விரிவான மதிப்பீட்டைத் தொடர்ந்து உலகின் முன்னணி தரச் சான்று வழங்கல் நிறுவனமான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
'மக்கள் வங்கியைப் பொறுத்தவரை ISO 22301:2019 தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். இது தொழிற்பாட்டு மீள்திறன், இடைவிடாத சேவை, மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றில் எமது ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
மிகுந்த மதிப்பு மிக்க இந்த தர அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது அரச வங்கி என்ற ரீதியில், தங்குதடையற்ற வங்கிச்சேவைகளை உறுதி செய்யும் அதேசமயம், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்கு அதியுயர் தராதரம் கொண்ட நம்பகத்தன்மை மற்றும் மகத்துவம் ஆகியவற்றை வழங்குவதற்கு எமது கட்டமைப்புக்கள் மற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.'
வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவத்திற்கான சர்வதேச தர அங்கீகாரமாக இது காணப்படுவதுடன், எதிர்பாராமல் இடையூறுகள் ஏற்படுகின்ற சமயங்களில் அவற்றுக்கு சிறப்பாக முகங்கொடுக்க திறன் மிக்க வழியில் தயார் நிலை கொண்ட, அவற்றுக்கு உரிய பதில் நடவடிக்கைகளை எடுக்கவல்ல, மற்றும் அச்சூழ்நிலைகளிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆற்றல் கொண்டவையாக மாறுவதற்கு நிறுவனங்களுக்கு இடமளிக்கின்ற அதேசமயம், முக்கியமான சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதையும் உறுதி செய்கின்றது.
பாதகமான சூழ்நிலைகளின் போதும் அத்தியாவசிய வங்கிச்சேவை சார்ந்த தொழிற்பாடுகளைப் பேணி, வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மக்கள் வங்கியின் ஆற்றலை இத்தர அங்கீகாரம் எடுத்துக்காட்டுகின்றது.





