ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

 


 காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி சக்ர் அபு கரீம்  கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட தளபதி சக்ர் அபு கரீம் கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இஸ்ரேலிய படையினர் மீது அண்மைய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களிலும் இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.

அத்துடன் தளபதி சக்ர் அபு கரீம் ஹமாஸ் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக IDF தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் நடத்திய இந்த சமீபத்திய வான்வழித் தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் போராளியும் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.