மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள ஆய்வு கூடத்திற்கு பின்னால் திடீர் தீ விபத்து தீயணைப்புப் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்!










மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கட்டுமானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்திற்குப் பின்னால் உள்ள வனாந்தரப் பகுதியில் இன்று திடீரெனப் பரவிய பெரும் தீ, தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினரின் அதிரடி முயற்சியால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
​குறித்த ஆய்வு கூடத்தின் பின்புறமாக அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. காற்றின் வேகம் காரணமாக இந்தத் தீ மிக விரைவாக ஏனைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

​இதனைத் தொடர்ந்து உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. 

தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு சென்று 
​தீயி அதிகமாகக் காணப்பட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும் உடனடியாகத் தீயணைப்புப் படையினருடன் இணைந்து கடும் பிரேயத்தனத்திற்கு மத்தியில் சென்றனர்

 ​எனினும், தீயணைப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினரின் பல மணிநேரப் போராட்டத்திற்கும்,  மத்தியில் தீ மேலும் பரவவிடாமல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.