வறுமை ஒழிப்பிற்காக ரூ. 25,000 மில்லியன் ஒதுக்கீடு: "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்கள்" வேலைத்திட்டம் ஆரையம்பதியில் இன்று ஆரம்பம்!

 










இலங்கையின் பல்பரிமாண வறுமை நிலையினை ஒழிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட பிரம்மாண்ட கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (02.06.2026) மட்டக்களப்பு, ஆரையம்பதி கோவிற்குளம் பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ், "சமூக சக்தி 2026" தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்கள்" என்ற இந்த புதிய திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
    ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி: ரூ. 25,000 மில்லியன்
    இலக்கு: தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கிராமங்கள்
    நோக்கம்: கிராமிய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேம்பாடு

இன்று நடைபெற்ற இந்த அங்குரார்பண நிகழ்வானது, ஆரையம்பதி 4ம் வட்டாரத்திற்கு உட்பட்ட 4 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளை உள்ளடக்கிய கோவிற்குளம் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.
 
    இந்நீகழ்வில் கிராம உத்தியோகஸ்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகஸ்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரஜாசக்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும், கிராமிய உட்கட்டமைப்புகளும் பெரும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.