Sivakumar- Chief Editor.
மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லடி ஸ்ரீ வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழாவானது, எம்பெருமான் முருகப்பெருமானின் திருவருளினால் 23.05.2026 சனிக்கிழமை அன்று தூய்மை மற்றும் பாதுகாப்பு வழிபாடான 'வாஸ்து சாந்தி'யுடன் மிக விமரிசையாக ஆரம்பமானது
தொடர்ந்து பக்திப் பெருக்குடன் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு உற்சவம், எதிர்வரும் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் சமுத்திர நீராடல் (தீர்த்தோற்சவம்), பொன்னூஞ்சல் ஆகிய சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளதுடன், வருகை தரும் அடியார்களுக்குப் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 02.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று வைரவர் பூசையுடன் இவ்வாண்டிற்கான அலங்காரத் திருவிழா நிறைவுபெறவுள்ளது. எனவே, இந்த ஆன்மீக மகோற்சவத்தில் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு, எம்பெருமான் ஸ்ரீ வேலாயுதசுவாமியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் பக்திபூர்வமாக அழைக்கின்றனர்.
.jpg)




