2026 அக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சமூகத்தை மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புபவர்களிடமிருந்து, தொடர்ந்து 6 வது ஆண்டாக "சித்துவிலி சித்தம்" சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிக்கான ஓவியங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) வரவேற்கிறது.
போட்டியின் முக்கிய பிரிவுகள்:
இந்தப் போட்டி இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்:
பாடசாலைப் பிரிவு
திறந்த பிரிவு
ஓவியங்களை வரைவதற்கான நிபந்தனைகள்:
சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் ஆக்கங்கள் A4 அளவு தாளில் வரையப்பட வேண்டும்.
பஸ்டல் (Pastel), வாட்டர் கலர் (Water color) போன்ற எந்தவொரு ஊடகத்தையும் பயன்படுத்தி வரையலாம்.
ஓவியங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி:
ஜூன் 30, 2026 அல்லது அதற்கு முன் பதிவு அஞ்சல் (Registered Post) மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் நேரடியாக கையளித்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஓவியங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைவர்,
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,
எண்: 330, தலவதுகொட வீதி,
மாதிவெல, ஸ்ரீ ஜெயவர்தனபுர.




