கவிஞர்-அரசியல் ஆய்வாளர்- மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம் என 22 படங்களின் நடிகரும், பன்முக ஆளுமையாளருமான, திரு. V.I.S.ஜெயபாலன் அவர்களுடனான சினிமா பற்றிய கலந்துரையாடல் 31.05.2026(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. இதனை மட்டக்களப்பு "தேவா சினி புரொடக்ஷன்"(Deva Cine Production)நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் திரைத் துறை சார்ந்து கற்கையில் ஈடுபட்டிருக்கும் சினிமா மாணவர்கள், மற்றும் தேவா சினி புரொடக்ஷன் நிறுவன அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தேவா சினி புரொடக்க்ஷன்(Deva Cine Production)கடந்த வருடம்(2025) இயக்குனர்களுக்கான பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அதேபோன்று இவ்வருடம்(2026) நடிப்புப் பயிற்சியை(Basic Acting Practice) ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்திய திரைத்துறை சார்ந்த பயிற்சியாளர்களால் ஆறு நாட்கள் கொண்ட பயிற்சியாக முன்னெடுக்கப்பட இருக்கிறது.
எதிர்காலத்திலும்(2027) ஒளிப்பதிவு(Cinematography)துறை சார்ந்த பயிற்சியை தேவா சினி புரொடக்சன் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)






