ந.குகதர்சன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்தில் பல தசாப்தங்களாக தங்களுக்கு என்று ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமல் மாவட்ட ரீதியாக மென் பந்து, வன் பந்து கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி சாதித்து வரும் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம் எதிர் காலத்தில் மட்டக்களப்பின் அடையாளமாக மாறும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார்.
செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் ஆர். பி. எல் (RPL) போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்.
இந்தியாவின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் தாக்கம் காரணமாக தற்போது உலகம் முழுவதும் அதையொட்டிய பல்வேறு கிரிக்கட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல விளையாட்டு கழகங்கள் கிரிக்கெட் போட்டிகளை நாடாத்தி வருகின்றனர்.
அந்த வகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்தில்
பல தசாப்தங்களாக தங்களுக்கு என்று ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமல் மாவட்ட ரீதியாக மென் பந்து, வன் பந்து கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி சாதித்து வரும் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம் எதிர் காலத்தில் மட்டக்களப்பின் அடையாளமாக மாறும் அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
மைதானம் ஒன்று இல்லாமல் ஒரு சிறிய தனியார் காணியில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் செங்கலடி பசுதளிர் விளையாட்டு கழகம் மென் பந்து கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அல்லாது வன் பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
அத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்.பி.எல் (RPL) என்ற ரமேஸ்புரம் பிரிமியர் லீக் போட்டிகளை மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றனர்.
அதற்காக பிரத்தியோகமாக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு மற்றும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தற்போது வரை ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கான ஒரு பொது மைதானம் இல்லாத நிலை காணப்படுகிறது.
எதிர் காலத்தில் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கான மைதானம் ஒன்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
குறிப்பாக எனது வட்டாரத்தில் உள்ள தளவாய்,புன்னைக்குட் பகுதிகளில் உள்ள அரச காணிகள் அடையாளம் காணப்பட்டு பிரதேச அபிவிருத்தி குழு ஊடாக விளையாட்டு அமைச்சுக்கு மைதானம் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புவதன் ஊடாக ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் சிறந்த தரத்திலான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்க முடியும்.
அவ்வாறான விளையாட்டு மைதானம் ஒன்று அமையுமாக இருந்தால் அந்த மைதானத்தின் விளையாட்டு போட்டிகள் முதல் கொண்டு அனைத்து பயிற்சிகளையும் தலைமை தாங்கி நடாத்தும் பொறுப்பு செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகத்திற்கே கிடைக்கும்.
அத்துடன் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு மைதானம்,முறையான பயிற்சிகள், பயிற்சி மைதானம், பயிற்சி பெறுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்கள் என அனைத்து வளங்களும் கிடைக்குமாக இருத்தால் எதிர் காலத்தில் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகமும் கிரிக்கெடில் மட்டக்களப்பின் அடையாளமாக மாறும் என தெரிவித்தார்.
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)





