மட்டு நகரில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி



 







 

 

 

வரதன்

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வீதி விபத்துக்களை தடுக்கும் செயல் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஒரு சில சாரதிகளின் அசமந்த போக்கினால் நாளாந்தம்  விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன

 இன்று காலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இடம் பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 மட்டக்களப்பில் இருந்து தலைநகர் நோக்கி சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது

 கார் சாரதியின் அசமந்த போக்கினால்  விபத்து இடம் பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது தனது தாயுடன் முன் பள்ளிக்கு  பாடசாலை  சென்ற சிறுமி ஒருவரே இவ்வாதி விபத்து சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார் பலத்த காயங்களுக்கு உள்ளான தாயும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்

 சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் ஆரம்ப கட்ட விபத்துக்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்