கடுகண்ணாவ
பகுதியில், தனது வீட்டை விட்டுச் சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவரைக்
கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
20 வயதுடைய தருஷி அமாயா என்ற இளம் குடும்பப் பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த
மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று, வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல்
குறித்தப் பெண் வீட்டைவிட்டுச் சென்றதாக கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில்
அவரது கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.