Sivakumar.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா திருச்சடங்கு மஹோற்சவம் வரும் ஜூன் 07 ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
07.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணிக்கு பக்திப் பரவசத்துடன் திருக்கதவு திறக்கப்பட்டு திருச்சடங்கு ஆரம்பமாவதுடன், 10.06.2026 (புதன்கிழமை) அன்று திருக்கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதிவலமாக இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, 12.06.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 4:00 மணியளவில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீமிதிப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
தீமிதிப்பு நடைபெறும் அன்றைய தினம் (ஜூன் 12) பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் விசேட பூஜைகளுடன் வருடாந்த திருச்சடங்கு மஹோற்சவம் இனிதே நிறைவு பெறும்.
அன்னையின் அருளாசி பெற அனைத்து பக்த அடியார்களை புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.













































