காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் யுவதியை படு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற இளைஞன் .

 


இளம் யுவதி ஒருவர் அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார்.

 எனினும், மேற்படி இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞர், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

அவரைக் கைது செய்யப் காவல்துறையினர் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.