கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி வரலாற்றுச் சாதனை!




கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை, பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் தேதி கிண்ணியாவில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில், கல்லூரி அணியினர் சிறப்பாக விளையாடி, மாகாண மட்டத்தில் மூன்றாம் சாம்பியன் (Third Champion) என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோட் அவர்களின் தலைமையில் சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டதன் பயனாக, இவ்வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி, கல்லூரியின் விளையாட்டுத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.