கல்முனை விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு

 
















( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை  ஒளிரும் கரங்கள் (Rising Hands) நிறுவனத்தினுடாக  தொழில் பயிற்சியை மேற்கொள்ளும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும்  அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
மட்டக்களப்பு  மியானி (Miyani ) நிலையத்தில் நேற்று  நடைபெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர்  எஸ். சந்திரகுமார்  மற்றும்  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி  எல். சுபாஷ்கரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும்  நிகழ்வுகளை  மட்டக்களப்பு விவேகானந்தா தொழிநுட்பக்கல்லூரி வளவாளர்கள்  மேற்கொண்டனர்.

 இந்நிகழ்வில்  சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும்,  அவர்களது பெற்றோர்களும்  கலந்துகொண்டதுடன்  தங்களது தொழில்  பயிற்சி சார்ந்த விடயங்களை செயன்முறை மூலமாக நிலையத்திற்கு வெளியே சுற்றுலா சென்று கற்றுக்கொள்ளக்கூடியதாக இச் செயலமர்வு அமைந்திருந்தது சிறப்பம்சமாகும்.