கல்முனை வலயத்தில் 34 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் சாந்தகுமார்(10.06.2026) ஓய்வு பெற்றார்.
அவரது
சேவையை பாராட்டி கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம்
மற்றும் அலுவலக கல்விசார் உத்தியோகத்தர்கள் இணைந்து பாராட்டு விழாவை
நடாத்தினார்கள்.
கல்முனையை
சேர்ந்த காராளசிங்கம் நேசரெத்தினம் ஆகியோரின் புதல்வரான சாந்தகுமார் ,
1992 ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பெற்று பின்னர்
ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.
2015
ஆம் ஆண்டு முதல் கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி ஆலோசகராகப்
பொறுப்பேற்று, ஆரம்பக் கல்வியின் தர உயர்விற்கும் ஆசிரியர்
வழிகாட்டலிற்கும் குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்கியுள்ளார்.
மேலும் சமூக, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.
நற்பட்டிமுனை
கல்வி அபிவிருத்திக் கழகத்தின் உறுப்பினராகவும், நற்பட்டிமுனை அறநெறி
பாடசாலை அறநெறிப் பாடசாலையின் அதிபராகவும், நற்பட்டிமுனை விவேகானந்த
விளையாட்டுக் கழகத்தின் முதற்கட்ட உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும்,
சாலூரம், வாழ்வியம், கல்வியம் அமைப்புக்களின் உறுப்பினரகவும் கல்முனை
எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளராகவும், கல்முனை நெற் ஊடக
வலையமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் இருந்து இலக்கிய மற்றும் ஊடக
வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
அத்துடன்,
நகவிதா அமைப்பின் கலை இலக்கிய வட்ட உறுப்பினராகவும், கல்வியம் அமைப்பின்
செயலாளராகவும், சைவ மகா சபையின் அறநெறிப் பாடசாலை செயலாளராகவும், உதவும்
பொற்கரங்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும், கல்முனை பிராந்திய இணையம் கனடா
– கல்முனை கிளையின் உறுப்பினராகவும் பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகின்றார்.
( வி.ரி. சகாதேவராஜா)











