மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பை சட்ட நடவடிக்கை மூலமே கட்டுப்படுத்த முடியும் -- மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார்

 

 


வரதன்



 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டு வருவதாகவும் சட்ட நடவடிக்கை மூலமே நிரந்தர தீர்வினை காண முடியும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இதனை கட்டுப்படுத்த முடியாது-  மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்க அமைய மாதாந்தம் எமது செயல் திட்டம் தொடர்ச்சியாக போலீசாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இவ்வாறான டெங்கு பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு

 சட்ட நடவடிக்கை மூலமே இதற்கு நிரந்தர தீர்வினை காண முடியும் தண்டனைகள் வழங்கப்படாது விட்டால் குற்றங்களை தடுக்க முடியாது சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்ட வீடுகளுக்கு இனிமேல் நேரடியாகவே சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமாங்கம் கல்லடி  நாவற் குடா கொக்குவில் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டு வருவதாகவும்

பாடசாலைகளில் சுகாதாரக் குழுக்கள் மூலம் இவை பரவாமல் தடுப்பதற்கான செயல் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இருப்பினும் சில பாடசாலைகளில் அறிவுரைகளை மீறி செயற்படுவதையும் காணமுடிகின்றது    என   மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார்  மாவட்டத்தில் முன்னெடுக்கும் டெங்கு செயற்பாடு தற்போதைய நிலைமை பற்றி  இன்று ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்