(வி.ரி.சகாதேவராஜா)
2026ம்
ஆண்டு கதிர்காமபாதயாத்திரையை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி
தம்பிலுவில் சைவநெறிக்கூட உறுப்பினர்கள் வாகுறவெட்டையில் சிரமதான பணியை
மேற்கொண்டனர்.
உகந்தை
கதிர்காமம் காட்டுப் பாதையில் முதலாவது தங்குமிடம் வாகூரவெட்டை அல்லது
கிணற்றடி அல்லது வண்ணாத்திரகிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற பக்தர்கள் இங்கு அன்றிரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலை பூமி பூஜை செய்து குமுக்கன் நோக்கி புறப்படுவது வழமை.
பக்தர்களின்
பாவனைக்காக, ஏலவே சேதமடைந்திருந்த கிணறுகளை சீரமைப்பு செய்து கிணற்று நீரை
சுத்திகரித்து பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்தனர்.








