சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மகோற்சவத்தின் பிரதான நிகழ்வாக தீ மிதிப்பு வைபவம் ஜூன் 29 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவுள்ளனர்.
20 ஆம் திகதி சனிக்கிழமை பாற்குடபவனி இடம் பெறும்.
திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு விசேட பூஜைகள் நடைபெறுவதுடன், மாலை நேரங்களில் சமய சொற்பொழிவுகள், கிரியாக்கள் மற்றும் உற்சவ நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வாண்டு மகோற்சவம் தொடர்ந்து பல்வேறு பூஜைகள், நேர்த்திக்கடன் வழிபாடுகள், விசேட கிரியைகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், ஜூலை 6 ஆம் திகதி எட்டாம் நாள் சடங்குகளுடன் மகோற்சவ நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.
வி.ரி.சகாதேவராஜா)





