இன்று சிறப்பாக நடைபெற்ற அம்மனின் வைகாசி சடங்கு!

 


















வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தி சடங்கு
இன்று (2) செவ்வாய்க் கிழமை அதிகாலை பக்தி பூர்வமாக உணர்வோடு நடைபெற்றது.

ஆயிரமாயிரம் பக்தர்கள் அந்த அதிகாலை வேளையில் வந்து கலந்து கொண்டனர்.

சரியாக 4 மணியளவில் ஆரம்பித்த சடங்கு கிரியைகள் பூஜைகள் யாவும் 5 மணிக்கு குளிர்த்தி பாடுதலுடன் நிறைவுற்றது.

பிள்ளைகள் விற்று வாங்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

 கடந்த திங்களன்று(25) கடல்நீர் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் இச் சடங்கு ஆரம்பித்தது. 

எதிர்வரும் 08ஆம் திகதி   மாலை பொங்கலுடன் கூடிய எட்டாம் சடங்கு நிகழ்வு டன் நிறைவடையவிருக்கிறது.
 
 
 ( வி.ரி. சகாதேவராஜா)