மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனை முன்னெடுப்பு .








வரதன்



தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று  வடிகான்கள் கடைத் தொகுதிகள் பூங்காக்கள் போன்ற இடங்களில்  டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் காத்தான்குடி சுற்றாடல் பிரிவு போலீசார் மற்றும்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்ததாக

 இந்த  டெங்கு பரிசோதனை  செயற்திட்டம் இன்று மட்டு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி  தேசிய பாடசாலைக்கு அண்டிய பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்கள் வடிகான்கள் பூங்காக்கள் என்பன மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் தலைமையில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது 


இதேவேளை இப்பகுதிகளில் காணப்படும் சில வர்த்தக நிலையங்களில் டெங்கு குழம்பிகள் காணப்பட்டதனால் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் சுற்றாடல் பிரிவினரால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது