வவுணத்தீவு பிரதேசத்தில் 2 மில்லியன் ரூபா செலவில் புதிய பல நோக்கு கட்டிட திறப்பு விழா நிகழ்வு










வரதன்



  கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ்  பின்தங்கிய பிரதேச மக்களின்  நலத்திட்டங்களை உரியவர்களுக்கு விரைவாக முன்னெடுக்கும் வகையில்  

20 லட்சம் ரூபா செலவில் புதிதாக புனரமைக்கப்பட்ட   நறி புல்  தோட்ட   பிரதேச கிராம பிரிவுக்கான  பல்நோக்கு கட்டிட  திறப்பு விழா நிகழ்வு வவுன தீவு செயலாளர் திருமதி சத்யா நந்தி நமசிவாயம் இன்று தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்து பணிகளை ஆரம்பித்து வைத்தார் கொண்டார்

 புதிய கட்டடத் தொகுதியில்
அரச ஊழியர்களுக்கான சகல வசதிகளிலும் கூடிய கடமையாற்றும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன 

ஆயத்தியமலை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி இப்பகுதிக்கான பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி கிராம சேவை உத்தியோஸ்தர்கள் பொதுமக்கள் என பலர் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 பின் தங்கிய  மக்களுக்காக சிறப்பான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் இங்கு பிரதேச மக்களால் கவுரவிக்கப்பட்டனர்