கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்



கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், ஆரட்சி பண்டாரகே சந்திர வன்சல கோசல விஜயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், அனுராதபுரம் - தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய வனவள திணைக்கள அதிகாரி என்றும், ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 05.06.2026 அன்று அவர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று (06) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.