தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட கூடிய பகுதியாக இது உள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.





