சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஜீவராசா கதுஷாத் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கூட்டுறவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமத்துவம் ஆகிய தொனிப்பொருள்களில் இந்தச் சித்திரப் போட்டி நடத்தப்பட்டது. கல்வி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்விப் புலத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்களின் அழகியல், படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கனிஷ்ட பிரிவில் (தரம் 6 - 9) போட்டியிட்ட, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவன் ஜீவராசா கதுஷாத் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு கல்வி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில், அதன் அலுவலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது.
திறமைமிக்க இம்மாணவன் கடந்த 2025 ஆம் ஆண்டும் பல தேசிய, சர்வதேச ரீதியிலான போட்டிகளில் சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவன் ஜீவராசா கதுஷாத்தை பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.





