ஈரான் விடுத்த ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் ஈரானைக் குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய வான்பரப்பில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, ஈரான் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தலின் பேரில் டெஹ்ரான் விமான நிலையத்தின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கு (Imam Khomeini International Airport) வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனான் மீதான தாக்குதல்களை கண்டித்து ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இந்நிலையில் அதற்கு உடனடியாக எவ்வித தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என இஸ்ரேல் பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அதனையும் மீறி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் காரணமாக தெஹ்ரான் விமான நிலையம் உடனடியாக மூட்ப்பட்டுள்ளது.





