கோபாலபுரத்தில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு அமோக வரவேற்பு;நாளை திருகோணேஸ்வரத்தில் இந்தியர்கள், சிங்களவர் இணைவார்கள்!

 






















( வி.ரி.சகாதேவராஜா)


யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்களுக்கு இருபதாவது நாளான    (11)   வியாழக்கிழமை நிலாவெளி கோபாலபுரத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

நாளை(12) வெள்ளிக்கிழமை 
 வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைவர்.

அங்கு, கொழும்பில் இருந்து 10 சிங்கள பக்தர்களும், இந்தியன் உயர் ஸ்தானீகராலய 10 இந்தியர்களும் யாத்திரையில் இணைய விருப்பதாக யாத்திரைக்குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி கோபாலபுரத்தில் இருந்து இன்று தெரிவித்தார்.

ஏலவே, நீர்கொழும்பைச்சேர்ந்த பெர்ணான்டோ எனும் சிங்கள பக்தர் நான்காவது வருடமாக வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 123அடியார்கள் பயணிக்கும் இப் பாதயாத்திரை எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.