SIVAKUMAR .M
மட்டக்களப்பு காந்தி பூங்கா மூன்றலில் இருந்து பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியாக வருகை தந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர்களும் கையளித்தனர்.
உலர்த்தப்படாத நெல்லுக்கான நிர்ணய விலை 110 தரவும், விவசாயமே நாட்டின் முதுகெலும்பு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, யூரியா க்கு 15,000 நெல்லுக்கு 5000 போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியாக வருகை தந்த விவசாயிகள் பிரதேச செயலக பிரதான நுழைவாயிலில் நின்று தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பியவுடன் பின்னர் அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் அவர்களை தந்து விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து அவர்களது மகஜரையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர் தங்களது கோரிக்கைகளையும் மகஜரையும் பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் அப்பகுதியில் இருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.




.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)



.jpeg)





