கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தின சேகர் அவர்களால் . மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும், வைத்தியர் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது

 

 

 














வரதன்



இவ்வாண்டு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தின சேகர் .திணைக்களத்தின் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆளுநர் கருத்து தெரிவித்தார்

மட்டக்களப்பு, அரச கால்நடை வைத்திய அதிகாரி G. லிங்கேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர கலந்துகொண்டு மாகாணத்தில் முதல் தடவையாக 40 மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார் வைத்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.  அருள்ராஜ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சுல்பிகார் அபூபக்கர் உள்ளிட்ட கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள்  என பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர் 

அரசாங்க அதிபர் ஆளுநர் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் இங்கு கவுரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்