மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை பரிசீலனை செய்கிறது .

 


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) பரிசீலிக்கவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றைய விசாரணைகளின் போது, விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த மனுவை இன்றைய தினம் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.