வரதன்
டித்வா புயலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதேவேளை தாளங்குடா ஐந்தாம் கட்டை சந்தியிலிருந்து கொக்கட்டிச்சோலை செல்லும் பிரதான வீதியானது தற்போது காப்பட் ரீதியாக புனரமைக்கும் பணிகள் 50 மில்லியன் ரூபா செலவில் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களினால் இவ்விதி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும் இடம் பெற்று வந்தது தினசரி இப் போக்குவரத்து பதையிணை ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதனை பயன்படுத்தி வந்திருந்தனர் பணிகள் முடிவடைந்ததும் பொதுமக்கள் வீதியால் விரைவாக பயணம் செய்ய முடியும்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் பணிப்புரைக்க அமைவாக இப்பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது



.jpeg)








