உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம் இது!
2026ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்து, உலகக் கிண்ண மேடையில் களமிறங்கும் முதல் இலங்கைத் தமிழ் வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay).
உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் தடம் பதிக்கும் முதல் இலங்கைத் தமிழ் வம்சாவளி வீரர்.
அடுத்த மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப் பெரிய கால்பந்து திருவிழாவில், ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய அணியில் இவர் விளையாடுவது உலகத் தமிழ் சமூகத்திற்கே கிடைத்த ஒரு சிறப்பான தருணமாகும்.
தனது அசாத்திய திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த உன்னத உயரத்தை அடைந்துள்ள நிஷான் வேலுப்பிள்ளை, உலகெங்கும் வாழும் இளம் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
❝ இது ஒரு தனி வீரரின் சாதனை மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் கனவுகளையும் பெருமையையும் சர்வதேச அரங்கிற்கு சுமந்து செல்லும் வரலாற்றுப் பயணம்!
சர்வதேச அரங்கில் புதிய வரலாறு படைக்கத் தயாராகும் நம்மவர் நிஷான் வேலுப்பிள்ளைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!